அரசாங்க ஊக்கத்தொகை போதவில்லை – திருமணத்தை தவிர்க்கும் தென் கொரிய இளைஞர்கள்

உலகிலேயே மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ள தென் கொரியாவின் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருமண ஊக்கத்தொகை, மக்கள் தொகையை அதிகரிக்க போதுமானதாக இல்லை என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுமணத் தம்பதிகளுக்கு வீட்டு மானியங்கள் உட்பட ஒரு விரிவான தொகுப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை, மேலும் நாட்டில் இளைஞர்களிடையே திருமண விகிதம் குறைவாகவே உள்ளது.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, நாட்டில் 5 இளைஞர்களில் சுமார் 3 பேர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்துள்ளனர்.
இளைஞர்கள் திருமண திட்டங்களை முன்மொழிவதற்காக ஒரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள தென் கொரிய அரசாங்கம், திருமண வேட்பாளர்களுக்கு 14,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான தொகுப்பை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தொகுப்பில் வீட்டுவசதி மானியங்கள், திருமணத்தின் போது நீட்டிக்கப்பட்ட விடுப்பு மற்றும் திருமண விழாவிற்கான கூடுதல் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல சலுகைகள் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இருந்தும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்தும் திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.