இங்கிலாந்து ஆலைக்கு அரசு நிதி: டாடா ஸ்டீல் பேச்சு
டாடா ஸ்டீல் தனது இரும்பு உருக்காலைக்காக பிரித்தானிய அரசிடம் இருந்து சுமார் 50 கோடி பவுண்டுகள் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டாடா ஸ்டீல், இங்கிலாந்தின் சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் டால்போட்டில் இரும்பு உருக்கும் இயந்திரத்தை இயக்குகிறது. இதில் சுமார் 4,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக ஆலையின் இயந்திரங்களை பெரிய அளவில் மாற்ற வேண்டிய நிலைக்கு டாடா ஸ்டீல் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், குறிப்பிட்ட நிதியை அரசிடம் இருந்து பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனம் பிரிட்டன் அரசிடம் இருந்து சுமார் 50 மில்லியன் பவுண்டுகள் பெறுவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் அரசின் நிதியுதவியின் மூலம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் பெருமளவு குறைக்கப்படும் என்று டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.