கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்தக் கடிதத்தை அவர் இன்று (20) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புதிய அரசியல் பயணத்தை எதிர்பார்த்து தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாய் நாட்டிற்கும், அங்கு வாழும் சகோதர மக்களுக்கும் சேவை செய்வதே தனது ஒரே நோக்கம் எனக் கூறும் அவர், வெல்ல முடியாத நாட்டை உருவாக்குவதற்கான புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் குறிப்பிடுகின்றார்.
தாய்நாட்டை பெருமையுடன் மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய அணியுடன் இணைந்து செயற்படத் தயங்கப் போவதில்லை எனவும் அவர் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 17 times, 1 visits today)