கையடக்க தொலைப்பேசிகளுக்காக கூகுளின் அசத்தல் அம்சம் அறிமுகம்
கூகுள் தெஃப்ட் டிடெக்ஷன் லாக் (Theft detection lock)என்ற புதிய அம்சத்தை அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் அறிமுகம் செய்ய உள்ளது.
இதன் மூலம் போன் தொலைந்து போனாலும் உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாக்கப்படும். இந்த அம்சம் ஜியோமி 14T ப்ரோ ஆண்ட்ராய்டு போனில் கொண்டுவரப்பட்டுள்ளது.
கூகுள் திருட்டு தொடர்பான அம்சத்தில் கூகுள் 3 அம்சங்களை சேர்கிறது. Theft detection lock, offline device lock, and remote lock என்ற அம்சங்களை சேர்கிறது. பயனரின் கையிலிருந்து தொலைபேசியை ஒருவர் பறித்து செல்லும் போது, இந்த புதிய Theft detection lock ஆக்டிவேட் ஆகும். Machine learning model மூலம் திருடன் சென்ற இடத்தை தேடும்.
இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனால், போன் ஆட்டோமெட்டிக்காக லாக் ஆகி விடும். உங்கள் தனிப்பட்ட டேட்டா பாதுகாக்கப்படும்.
(Visited 6 times, 1 visits today)