அறிவியல் & தொழில்நுட்பம்

331 செயலிகளை அதிரடியாக நீக்கிய கூகுள்!

மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த கூகுள் பிளே ஸ்டோரில் பாதுகாப்பான ஆப்கள் தான் அதிகம் இருக்கும். இருந்தும் சில சமயம் பாதுகாப்பு குறைபாடு உள்ள, சில விஷமதனமான வேலைகளை செய்யும் ஆப்கள் இருக்கும். அதனை அவ்வப்போது கூகுள் கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரில் இருந்து வெளியேற்றிவிடும்.

அப்படியான செயல்முறை தற்போது நிகழ்ந்துள்ளது. அதாவது, பாதுகாப்பு குறைபாடுகள், பயனர்களுக்கு விரும்பத்தகாத வேலைகளை செய்வது என பல்வேறு விவகாரங்கள் கண்டறியப்பட்டு 331 செயலிகள் (ஆப்கள்) கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த 331 செயலிகளை சுமார் 60 மில்லியன் (6 கோடி) பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

அதில், AquaTracker, ClickSave Downloader, Scan Hawk, Water Time Tracker, Be More, TranslateScan ஆகிய ஒவ்வொரு செயலிகளையும் தலா 1 மில்லியன் (10 லட்சம்) பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர் என கூறப்படுகிறது.

ஏன் நீக்கப்பட்டது?
இந்த செயலிகள் பயனர்களுக்கு அனுமதியின்றி கட்டாய விளம்பரங்களை காட்டியதாகவும், சில சட்டத்திற்கு புறம்பான விளம்பரங்களை காட்டியதாகவும், சில ஆப்கள் கூகுள் வாய்ஸ் போல சித்தரிக்கப்பட்டு செயல்பட்டு, பயனர்கள் செல்போனை பயன்படுத்தாத சமயத்திலும் பின்னால் இயங்கி வந்துள்ளன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

சில ஆப்கள் பேஸ்புக் போல மற்ற சமூக வலைதள பக்கங்கள் போல தங்களை காட்டிக்கொண்டு பயனர்களின் டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு விவரங்களை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீங்கிழைக்கும் ஆப்கள் பயனர் அனுமதி இல்லாமல் பின்னணியில் தாமாக தொடங்கி செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே சமீபத்தில் அவை கூகுள் பிளே ஸ்டோர் மெனுவிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது. சில ஆப்கள் முழுத்திரையிலும் விளம்பரங்களைக் காட்டி, மற்ற பொத்தான்களை கூட காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

(Visited 32 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!