கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் Google நிறுவனம் பாஸ்வேர்ட் இல்லாமல் லாகின் செய்யும் Passkey என்ற முறையை கொண்டு வந்தது. தற்போது ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பாஸ்வேர்டுக்கு பதிலாக Passkey மட்டும் பயன்படுத்துமாறு google வலியுறுத்தியுள்ளது.
ஒருவரின் தனிப்பட்ட கணக்குக்கு பயனர்கள் விருப்பப்பட்டால் பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் Passkey பயன்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் பயணர்களின் கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும் என பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கருதுகின்றன. இப்போது எல்லா பயனர்களும் பாஸ்கீ பயன்படுத்தி இயல்பாக லாகின் செய்யும் முறை வந்துவிட்டது. எனவே இனி ஒவ்வொரு முறை கூகுள் கணக்குக்குள் ஒருவர் நுழைய வேண்டும் என்றால் பாஸ்கீ பயன்படுத்துவது அவசியமாகும்.
எனவே இனி ஜிமெயில் உள்ளிட்ட எந்த கணக்குகளுக்கும் பாஸ்வேர்ட் தேவையில்லை. மேலும் நீங்கள் கட்டாயம் பாஸ்கீதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் இல்லை. உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்றால் எப்போதும் போல பாஸ்வேர்ட் பயன்படுத்தியே கூகுள் கணக்குகளை லாகின் செய்ய முடியும்.
ஒருவர் கடவுச் சொல்லுக்கு பதிலாக பாஸ்கீ பயன்படுத்தும் போது ஹேக்கர்களிடமிருந்து அந்த கூகுள் கணக்கு பாதுகாப்பாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் ஒருவர் இணையத்தில் ஏமாற்றப்படுவதில் இருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். இதுவரை google Passkey பற்றி தெரியாதவர்கள் அதை இயக்குவதற்கு, உங்களின் கூகுள் கணக்கு பகுதிக்கு சென்று Security என்பதை கிளிக் செய்தால், Passkey பயன்படுத்துவதற்கான அம்சம் அதில் காட்டப்படும். அதில் Create A Passkey என்ற பட்டனை கிளிக் செய்து அந்த அம்சத்தை எனேபிள் செய்யலாம்.
எனவே நீங்கள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் உடனடியாக கூகுளின் பாஸ்கீ அம்சத்தை எனேபிள் செய்து கொள்வது நல்லது.