25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கூகுள்
25வது ஆண்டில் கூகுள் கால்பதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
1998-ம் ஆண்டு இதே நாளில், ஸ்டான்ஃபோர்டைச் சேர்ந்த பிஹெச்டி மாணவர்களான செர்ஜே பிரின் மற்றும் லாரன்ஸ் பேஜ் ஆகியோர் 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி கூகுளை உருவாக்கினர்.
இந்தத் தேடுதளம் உலக அளவில் பயன்படுத்தக் கூடியதாகவும், சர்வதேச அளவில் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர்.
உலகிலேயே மிகப்பெரிய நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களில் கூகுளும் அடங்கும். தற்போது 100 மொழிகளில் செயல்படும் இந்த கூகுள் தேடுதளம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கூகுள் டூடுலும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
அதாவது, முக்கிய நிகழ்வுகளை கூகுள் டூடுலாக வடிவமைக்கப்படும். அந்த வகையில் 1998-ம் ஆண்டு ‘பர்னிங் மேன்’ திருவிழாவைக் கொண்டாடும் விதமாக முதன்முதலாக கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் பல கோடி மக்களுக்கு பயன்தரும் கூகுள் இன்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அதற்கான பிரத்யேக டூடுலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.