Google நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு – நீக்கப்படும் கணக்குகள்

பயன்பாட்டில் இல்லாத Google கணக்குகளை நீக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Alphabet Inc நிறுவனத்தின் கூகிள் இதனை கூறியுள்ளது.
இந்த நடைமுறை டிசம்பர் மாதம் தொடங்கும். அதற்கமைய 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத கணக்குகள் நீக்கப்படும் என்று கூறப்பட்டது.
அதில் Gmail, Docs, Drive, Meet, Calendar, YouTube, Google Photos ஆகிய சேவைகளும் அடங்கும்.
தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் Googleகணக்குகளுக்கு மட்டும் நடைமுறை பொருந்தும்.
பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக Google கூறியுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வைத்திருப்போரைத் தொடர்புகொள்ளவிருப்பதாக கூறியுள்ளது.
(Visited 26 times, 1 visits today)