WhatsApp பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சர் தங்கள் யூசர்களுக்காக புதியதொரு வசதியை சேர்த்துள்ளது. அதாவது இனி வாட்ஸ்அப் யூசர்கள் ஒரு கான்டாக்டை (Contact) சேவ் செய்ய வேண்டுமெனில் நேரடியாக வாட்ஸ்அப்பில் அந்த நம்பரை சேவ் செய்து, அதற்குப் பின் வேண்டுமென்றால் மொபைல் போனில் சின்க் (Sync) செய்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் யூசர்கள் பலருக்கும் தங்களது போனின் டீஃபால்ட் (Default) காலிங் (Calling) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) செயலியாக வாட்ஸ்அப்பை தான் செட் செய்து வைத்துள்ளனர். போனில் உள்ள வழக்கமான மெசஞ்ஜர் செயலியை வெறும் ஓடிபி (OTP) – யை ரிசீவ் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சேவ் செய்யப்படும் கான்டாக்டுகள், வாட்ஸ்அப் எத்தனை டிவைஸ்களில் (Device) இணைக்கப்பட்டுள்ளதோ அத்தனை டிவைஸ்களிலும் சின்க் செய்யப்படும். இந்த வசதியை நீங்கள் வாட்ஸ்அப் வெப் (Whatsapp Web) யூசராக இருந்தாலும் அல்லது விண்டோஸ் (Windows) யூசராக இருந்தாலும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு சேவ் செய்யப்படும் கான்டாக்ட்ஸ் (Contacts) வாட்ஸ்அப்பின் மறைகுறியாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அதாவது இவ்வாறு சேவ் செய்யப்பட்டுள்ள கான்டாக்டுகளை நீங்கள் மட்டுமே, உங்களின் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டுள்ள டிவைஸ்களில் பார்த்து பயன்படுத்த இயலும் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
இதற்கு முன் வரை நாம் நம்முடைய மொபைலில் எண்களை சேவ் செய்து அதன் பின்தான் அவற்றை வாட்ஸ்அப்பில் பயன்படுத்த முடியும். இப்போது இந்த புதிய அப்டேட்டினால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இனி உங்களுடைய வாட்ஸ்அப்பில் கான்டாக்ட்களை சேவ் செய்து அதன் பின் வேண்டுமென்றால் அவற்றை உங்களது டவைசுக்கு மாற்றி சின்க் செய்து கொள்ளலாம். மேலும் உங்களது போன் எங்கேனும் தொலைந்துவிட்டால் கூட, மற்ற சின்க் செய்யப்பட்டுள்ள டிவைஸ்களின் உதவியுடனோ அல்லது உங்களது வாட்ஸ்அப்பை வேறொரு டிவைஸில் செயல்படுத்தியோ நீங்கள் சேவ் செய்து வைத்துள்ள கான்டாக்டுகளை பார்க்க முடியும்.
இவற்றோடு சேர்த்து மற்றுமொரு அற்புதமான அப்டேட்டையும் வாட்ஸ்அப் விரைவில் கொண்டுவர உள்ளது. இனி நீங்கள் வாட்ஸ்அப்பில் சேவ் செய்து வைத்துள்ள கான்டாக்டுகளில் அவற்றின் பெயர் மட்டுமே காண்பிக்கப்படும். அதாவது. ஏதேனும் கான்டாக்டை நீங்கள் கிளிக் செய்தால் முன்னர் அந்த கான்டாக்டின் மொபைல் எண் காண்பிக்கப்படும்.
இனி இந்த புதிய அப்டேட்டிற்கு பின் அந்த கான்டாக்டின் மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் ஏதும் கான்பிக்கப்படாது. வெறும் பெயர் மட்டுமே காண்பிக்கப்படும். இதன் மூலம் உங்களது பிரைவசி அதிகம் பாதுகாக்கப்படுகிறது. மேலே கூறப்பட்டுள்ள அப்டேட்டுகள் அனைத்தும் இனிவரும் வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் யூசர்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.