ஜெர்மனியில் வீடுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியில்சொந்தமாக வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கையானது குறைவடைந்துள்ளதனால் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, புதிய வீடு கட்டுவோர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக வங்கி ஒன்று குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
அதாவது வீடு கட்ட எண்ணுகின்றவர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு சிறந்த திட்டத்தை குறித்த வங்கியானது அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியின் அரச வங்கி ஒன்று இருந்து சின்ஸ் பிண்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த வங்கியிடம் இருந்து கடன் பெறுகின்றவர்கள் 20 வருடங்களுக்கு தங்களது வட்டி தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அண்மைக்காலங்களில் ஜெர்மனியில் குடும்பங்கள் இவ்வாறு வீடு கொள்ளவனவு செய்வது குறைவடைந்துள்ள காரணத்தினால் இதை ஊக்குவிப்பதற்காக இவ்வகையான சலுகை திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.