ஐரோப்பா

ஜெர்மனியில் இரட்டை பிரஜாவுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் இரட்டை பிரஜாவுரிமை அமுல்ப்படுத்துவது தொடர்பில் மக்களிடையே பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சிகளிடையே இந்த புதிய இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது ஏற்கனவே ஜெர்மனியின் உள் ஊர் ஆட்சி அமைச்சர் நான்சி வேசர் அவர்கள் சில முக்கிய விடயங்களை இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலங்களும் சட்ட ரீதியான முறையில் 8 வருடங்கள் ஜெர்மன் நாட்டிலே ஒருவர் இருந்தால் அவர் சில நிபந்தனைகள் அடிப்படையில் ஜெர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் புதிய சட்டத்தின் படி எவர் ஒருவர் சட்ட ரீதியான முறையில் ஜெர்மனியில் இருக்கும் பட்சத்தில் அவர் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தால் அவர் 5 வருடத்தில் ஜெர்மன் நாட்டு பிரஜா உரிமையை பெற முடியும்.

இந்நிலையில் புதிய பிரஜா உரிமையை பெற காத்து இருக்கும் நபர் தான இதுவரை வைத்து இருக்கின்ற அந்த நாட்டுடைய பிரஜா உரிமையை கைவிட தேவை இல்லை என்று புதிய சட்டம் தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது.

இதுவரை காலங்களும் சில குறிப்பட்ட நாடுகளில் உள்ள பிரஜைகள் மட்டும் ஜெர்மனியில் இரட்டை பிரஜா உரிமை வைத்து இருக்க கூடிய நிலைப்பாடு உள்ளது.

இந்நிலையில் புதிய சட்டத்தின் படி பல நாடுகளுக்கு இந்த இரட்டை பிரஜா உரிமையானது பொருந்தும் என்று தெரியவந்துள்ளது.

இதேவேளையில் எவர் ஒருவர் ஜெர்மன் நாட்டின் சமூதாயத்தில் தொழிற்கல்வி மற்றும் ஜெர்மன் மொழியில் திறமைவாய்ந்து இருந்தால் அவர் 3 வருடங்களில் ஜெர்மன் நாட்டு பிரஜா உரிமையை பெற முடியும்.

இந்த புதிய சட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் இந்த புதிய சட்டம் இயற்றப்படும என்று தெரியவந்து இருக்கின்றது.

மேலும் நிராகரிக்கப்பட்ட அகதிகளை 28 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து இருந்து இவர்களை திருப்பி அனுப்புவது தொடர்பான புதிய சட்டமும் வருகின்ற ஜனவரி மாதம் இயற்றப்படும் என்று தெரியவந்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்