சிங்கப்பூர் அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூர் அரச சிங்கப்பூரில் அரசாங்க ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சுமார் கால் மாத கொடுப்பனவு கிடைக்கவுள்ளதாக அரசாங்கச் சேவைப் பிரிவு அந்தத் தகவலை வெளியிட்டது.
அனைவருக்கும் பூஜ்ஜியம் புள்ளி மூன்று மாத கொடுப்பனவு வழங்கப்படும். தொடக்கநிலை அதிகாரிகளுக்குக் கூடுதலாக, 400 வெள்ளிவரை கொடுக்கப்படும்.
சிங்கப்பூரின் மெதுவடைந்த பொருளியல், உலகப் பொருளியல் நிலவரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கொடுப்பனவு தொகை நிர்ணயிக்கப்பட்டது.
ஆண்டிறுதி கொடுப்பனவை தீர்மானிப்பதிலும் அரசாங்கம், பொருளியல் நிலவரத்தைக் கூர்ந்து கவனிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தேசியச் சம்பள மன்ற வழிகாட்டிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.





