Samsung பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அறிமுகமாகும் புதிய கையடக்க தொலைபேசி
ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய கையடக்க தொலைபேசி என்றால் Samsung Galaxy என்று கூறலாம். தற்போது, Samsung நிறுவனம் தனது F சீரிஸில் அடுத்த மாடலான கேலக்ஸி Samsung Galaxy F54 வெளியிட உள்ளது.
ஜூன் 6 இந்தியாவில் வெளியாகவுள்ளது, இந்நிலையில் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, வரவிருக்கும் சாம்சங் 5G தொலைபேசியின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளது.
- வரவிருக்கும் Samsung Galaxy F54 கையடக்க தொலைபேசிகளில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி இடம்பெறும்.
- Samsung Galaxy F54 ஆனது நான்கு வருட ஆண்ட்ராய்டு OS மேம்படுத்தல்களைப் பெற தகுதியுடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
- 6.7 இன்ச் சூப்பர் FHD+AMOLED பிளஸ் டிஸ்ப்ளேவைப் பெறலாம், இது 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும்.
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும்.
- இது Octacore Exynos 1380 செயலியைப் பெறும்.
- பின் புற கேமராவில் முக்கிய லென்ஸ் 108MP ஆக இருக்கும். இது தவிர, அதில் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.
- மேலும், முன்பக்கம் 32MP கொண்ட செல்ஃபி கேமராவை அந்நிறுவனம் வழங்குகிறது.
(Visited 8 times, 1 visits today)