ஜெர்மனியில் எரிப்பொருட்களின் விலை தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஜெர்மனியில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
எனினும் ஜெர்மனியில் எரிப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் வாகனங்கள் தொடர்பான விடயத்தில் பொறுப்பான அமைப்பானது கருத்து தெரிவிக்கையில்,
தற்பொழுது உலக சந்தையில் எண்ணையுடைய விலையானது மிகவும் குறைந்து காணப்படுகின்றது.
அதனால் அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பெற்றோலுக்கு அறவிடப்படுகின்ற வரி அதிகமாக இருந்தாலும் கூட இது பொதுமக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்து இருக்கின்றது.
அதாவது சுத்திகரிக்கப்படாத எண்ணையின் விலை மிகவும் குறைவடைந்த காரணத்தினால் இந்த வரி கூடுதலாக அறவிடப்பட்டாலும் எண்ணை விலையில் பாரிய மாற்றத்தை பொதுமக்களிடையே ஏற்படாது என்றும் தெரிவித்து இருக்கின்றது.
கடந்த மாதம் வெளியாகிய அறிவிப்பிற்கமைய, ஜெர்மனியில் எரிப்பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தி மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எரிப்பொருட்களின் விலை அதிகரித்தால் பலர் சட்ட விரோதமான முறையில் காடு அழிப்பு நடவடிக்கையிகளில் ஈடுப்பட்டு வருவதாக ஜெர்மனியின் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக எரிப்பொருட்களின் விலையேற்றம் காரணத்தினால் மக்கள் இவ்வாறான சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக எஸன், பேர்ளின், பயண், ரைலான்ஃராக்ஸ் மாநிலம் போன்ற மாநிலங்களில் இவ்வாறான காடு அழிப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றது.