ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்! அதிகரிக்கப்படும் கொடுப்பனவு

ஜெர்மனியில் எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் ஓய்வூதியம் பெறுவோர் தற்போதைய தொகையை விட அதிக பணத்தை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்கம் அனைத்து வகையான ஓய்வூதியங்களையும் 3.74 சதவீதத்தால் அதிகரிக்கின்றது.
இதில் முதியோர் ஓய்வூதியங்கள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியங்கள் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் அடங்கும்.
உதாரணமாக ஊனமுற்ற ஒருவர் 1,000 யூரோ ஓய்வூதியம் பெறுவதாக இருந்தால் ஜூலை 01 முதல் அவர் 1,075 யூரோக்களை ஓய்வூதியமாக பெறுவார்.
அரசாங்கத்தின் இந்த மாற்றத்தால் 21 மில்லியனுக்கும் அதிகமான ஜெர்மானியர்கள் பயனடைவார்கள்.
இந்த 3.74 சதவீத ஓய்வூதிய அதிகரிப்பு, எதிர்பார்க்கப்படும் 2.2 சதவீத பணவீக்கத்தை விட அதிகமாகும்.
இதன்மூலம், ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிகளவான கொள்வனவு சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள்.
எவ்வாறாயினும், ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதிய அதிகரிப்பின் முழுமையான பலன்களை ஒகஸ்ட் மாதம் முதலே பெறுவார்கள்.
ஏனெனில், பராமரிப்பு காப்பீட்டு பங்களிப்பு ஜனவரி 2025இல் உயர்த்தப்பட்ட காரணத்தால் அந்த தொகை ஜூலை மாத ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.