பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு மாநில ஓய்வூதியம் 4.7 சதவீதம் உயரும் என்று தெரியவந்துள்ளது.
ஓய்வூதிய கொடுப்பனவுகளைப் பெறுபவர்களுக்கு இந்த உயர்வு சுமார் £500 கூடுதலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
‘டிரிபிள் லாக்’ என்று அழைக்கப்படுவதன் கீழ், மாநில ஓய்வூதியங்கள் ஆண்டுதோறும் பணவீக்கத்தை பொறுத்து கூடி குறைகின்றன.
இதன் அடிப்படையில் செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் தற்போது உள்ள பணவீக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
பழைய அடிப்படை மாநில ஓய்வூதியம் வாரத்திற்கு £184.75 அல்லது வருடத்திற்கு £9,607 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)