சிங்கப்பூரில் பணிபுரியும் வாகன சாரதிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் பணிபுரியும் சாரதிகளுக்கு சம்பளம் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜூலை முதல் சம்பளம் உயரும் எனவும் இது 2028 வரை நீடிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது துப்புரவு துறை சார்ந்த கழிவு லாரி சாரதிகளின் சம்பளம் உயரும் என்பது கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.
படிப்படியாக உயரும் சம்பள முறையின் கீழ் வருடம் தோறும் 210 சிங்கப்பூர் டொலர் அதிகரிக்கும். இதனால் ஊழியர்கள் 5 ஆண்டுகளில் 3,200 சிங்கப்பூர் டொலர் வரை பெறுவார்கள்.
அவர்களின் தற்போதைய சம்பளம் 2,200 சிங்கப்பூர் டொலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கழிவு நிர்வாக துறையில் வேலைக்கு சேரும் ஊழியர்கள் உட்பட 3000 பேர் இதனால் பயனடைவர்.
(Visited 12 times, 1 visits today)