சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூரில் கடுமையாக உழைக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குக் கூடுதல் நிதியுதவியை வழங்கப்படவுள்ளது.
மேம்படுத்தப்பட்ட ComLink திட்டத்தின் மூலம் அது சாத்தியமாகுமாகும் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
வேலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் பிள்ளைகள் பாலர் பள்ளிகளுக்குத் தொடர்ந்து செல்வதை உறுதிசெய்யவும் கடுமையாக உழைக்கும் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தோருக்குத் திட்டம் உதவியாக இருக்கும்.
அவற்றுடன் கடனைச் சரிவரத் திருப்பிச் செலுத்தவும் சொந்த வீடு வாங்கப் பணம் சேமிக்கவும் உதவித் திட்டம் கைகொடுக்கும். அடுத்த வருடத்தின் இரண்டாம் காலாண்டு தொடங்கி பாலர் பள்ளியில் சேர்க்கப்படும் ஒவ்வொரு 3 வயதுப் பிள்ளைக்கும் ஒரு முறை வழங்கப்படும் 500 வெள்ளி நிரப்புத்தொகை கிடைக்கும்.
தவறாமல் பாடசாலை செல்லும் பிள்ளையின் கணக்கில் ஒவ்வொரு காலாண்டும் கூடுதலாக 200 வெள்ளி நிரப்பப்படும். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தோர் வேலையில் நிலைத்திருப்பதை உறுதிசெய்யவும் உதவி வழங்கப்படும்.
அவர்கள் மத்திய சேமநிதிக்குத் தொகை செலுத்தும் வேலையில் இருப்பதோடு மாத வருமானமாகக் குறைந்தது 1,400 வெள்ளி ஈட்டவேண்டும். அத்தகையோர் வேலையில் நீடிக்கும் ஒவ்வொரு 3 மாதத்துக்கும் 550 வெள்ளி தொகையைப் பெறுவர்.
அதோடு மத்திய சேமநிதிக்குச் செல்லும் ஒவ்வொரு வெள்ளிக்கும் நிகராக 2 வெள்ளியை அரசாங்கம் வழங்கும். கடன்களைப் பொறுத்தவரை 5,000 வெள்ளி வரையிலான தொகையைத் திருப்பித் தருவதற்கான உதவியை அரசாங்கம் செய்துதரும் என குறிப்பிடப்படுகின்றது.