பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
பிரான்ஸில் வருமானம் குறைந்த நடுத்தரக் குடும்பங்களின் பாவனைக்காக எலெக்றிக் கார்களை மாதம் 100 யூரோக்கள் கட்டணத்துக்கு வாடகைக்கு வழங்கும் அரசின் திட்டம் புத்தாண்டில் தொடங்கவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், கார்பன் வெளியேற்றத்தைத் குறைத்துச் சூழல் பேணும் மாற்றத்துக்கான தனது திட்டங்களில் ஒன்றாக இதனை 2022 தேர்தல்கால வாக்குறுதிகளில் வெளியிட்டிருந்தார்.
அந்தத் திட்டம் 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகிறது என்பதை அவர் தனது ‘எக்ஸ்(‘X) சமூக ஊடகத் தளத்தில் வீடியோ மூலம் அறிவித்திருக்கிறார்.
குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்தம் நூறு யூரோக்கள் வாடகையில் புதிய எலெக்றிக் காரைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
(Visited 8 times, 1 visits today)