ஜெர்மனியில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அடுத்த மாதம் அதிகரிக்கப்படும் ஊதியம்

ஜெர்மனியில் அடுத்த மாதம் முதல் பல ஊழியர்கள் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
2025ஆம் ஆண்டில் இருந்து வரி மாற்றம் என்பது சிலருக்கு அவர்களின் கணக்குகளில் அதிக நிகர ஊதியம் இருக்கும் என்று அர்த்தமாகும்.
அதற்கமைய, ஜெர்மனியில் உள்ள நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சம்பள அதிகரிப்பிற்கு சில பணியாளர்கள் புத்தாண்டு வரை காத்திருக்க வேண்டியதில்லை எனவும் சிலருக்கு, அவர்களின் வருமானம் நவம்பர் மாத தொடக்கத்தில் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்க துறையில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் ஊதியம் நவம்பர் மாதம் முதல் அதிகரிக்கும். ஆனால் மேலும் பல துறைகளில் உள்ள ஊழியர்களும் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கலாம்.
(Visited 53 times, 1 visits today)