தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் இலங்கையில் தங்கத்தின் விலையும் அதனுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.
இதன்படி உலக சந்தையில் இன்றை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை $4,266 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று பவுண் ஒன்றின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
கொழும்பு ஹெட்டிவீதிய தங்க சந்தையில் 22 காரட் பவுண் ஒன்றின்விலை 312,000 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், 24 காரட் பவுண் ஒன்றின்விலை, 339,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.




