இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு
நாட்டில் தங்கத்தின் விலை 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று காலை கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 310,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நேற்று 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கிடையில், நேற்று 330,000 ரூபாயாக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 335,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு ஹெட்டி தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 1 visits today)





