அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – வகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
உலக சந்தை நிலவரங்களுக்கமைய நாட்டில் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தை அறிக்கைகளின்படி, கடந்த வியாழக்கிழமை (19), வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் (21) ஆகிய மூன்று நாட்களுக்குள் தங்கத்தின் விலை மொத்தமாக 29,000 ரூபாவினால் குறைந்துள்ளது.
வியாழக்கிழமை தங்கத்தின் விலை 13,000 ரூபாவினால் குறைந்ததைத் தொடர்ந்து, நேற்று மேலும் 6,000 ரூபாவினாலும், இன்று மீண்டும் 10,000 ரூபாவினாலும் விலை குறைவடைந்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் மட்டத்திற்குக் கீழ் வீழ்ச்சியடைந்தமையே இந்த விலை குறைப்பிற்கான பிரதான காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய கிழக்கு மோதல்கள் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், முதலீட்டு நடவடிக்கைகள் குறைவடைந்தமை மற்றும் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் அமெரிக்க டொலர் வலுவடைந்தமையும் இந்த வீழ்ச்சிக்குப் பங்களித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த நிலைமை தற்காலிகமானது என வலியுறுத்தியுள்ள ஆய்வாளர்கள், மசகு எண்ணெய் விலை ஸ்திரமடைந்தவுடன் தங்கத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.




