உலகம் செய்தி

உச்சம் தொட்ட தங்கத்தின் புதிய விலை – ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலர்

உலக சந்தையின் வரலாற்றில் முதல் முறையாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.

சமகாலத்தில் அரசியல் செயற்பாடு, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலைமை காரணமாக தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியமையினால் சடுதியாக விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்கு சந்தைகளில் தொடர்ந்து காணப்படும் நிச்சயமற்ற தன்மை, பணவீக்கம், வட்டிவீதங்களின் மாற்றங்கள் உள்ளிட்டவை தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.

பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் தங்கம் மீதான விருப்பமும் அதனுடன் கூடிய விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கு அமைய தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி