தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – இரண்டு பெண்களையும் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு

தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வௌ்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கல்கிஸ்ஸ நீதவான் ஏ.டி. சதுரிகா சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் பெண்ணொருவருன் பயணப் பொதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு வயதான பெண் T56 துப்பாக்கியுடன் வீடமைப்பு தொகுதி நோக்கி செல்வதாக, ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ் அவசர எண்ணான 119இற்கு அழைத்து தெரிவித்தனர்.
அதன்படி, வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு பெண்களிடமும் துப்பாக்கி பற்றி கேட்டபோது, அது காரின் பின்புறத்தில் இருப்பதாகவும், அது ஒரு பொம்மை துப்பாக்கி என்று நினைத்து அதைக் கொண்டு வந்ததாகவும் அவர்கள் கூறியதாக பாதுகாப்பு அதிகாரி மேலும் தெரிவித்தார்.