ஐரோப்பா

பிரித்தானியாவில் பணியில் இருந்து ஓய்வு பெறும் ஆடு!

பிரித்தானியாவில் கிராம மக்களைச் தேடிச் சென்று முட்டைகளை விநியோகிக்கும் ஆடு விரைவில் அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறது.

வெண்மையும் சாம்பலும் மிளிரும் ஆட்டின் பெயர் ஆலன் (Alan) என கூறப்படுகின்றது.

உரிமையாளருடன் உலாப் போகும் இந்த ஆடு நாள்தோறும் கிராம மக்களைத் தேடிச் சென்று முட்டைகளை விநியோகிப்பது வாடிக்கையாகும்.

கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்கிறது இந்த வேலை.

பால், பாலாடைக் கட்டி உற்பத்திக்காக ஆட்டை வாங்கினார் உரிமையாளர். அந்த வேலை முடிந்ததும் முட்டை விநியோகத்தில் ஈடுபடுத்தினார்.

சுமார் மூன்றரை கிலோமீட்டர் பயணம் செய்து மக்களுக்கு முட்டைகளை விநியோகிக்கிறது ஆலன், ஈராண்டுக்கு முன் ஒரு குதிரை தாக்கியதால் காயமடைந்தது.

அதனால் விரைவில் ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதென கூறப்படுகின்றது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!