GOAT படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்? ஹாட் அப்டேட்…
																																		லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடக்க அடுத்த கட்டமாக இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் மொத்தமாக முடித்துவிட படக்குழு விறுவிறுப்பான வேலைகளை செய்து வருகிறார்களாம்.
இந்த நிலையில் கோட் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 3 பாடல்களை கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும், பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

(Visited 11 times, 1 visits today)
                                    
        



                        
                            
