இலங்கை செய்தி

ஞானசார தேரர் விடுதலையாகவில்லை

வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாய மற்றும் அமரபுர மகா சங்க சபையின் பீடாதிபதிகள், ஞானசார தேரரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா (பொதுபல சேனா) பொதுச் செயலாளர்  கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 பேர் மற்றும் மஹர சிறைச்சாலையில் இருந்து 37 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள சில சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில் பத்து பெண் கைதிகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!