உலக அளவில் நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியன் உணவு வீணாகிறது
உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் பட்டினி கிடக்கும் வேளையில், மக்கள் ஒரு நாளைக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான உணவை வீணடிப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய ஐக்கிய நாடுகளின் அறிக்கை, பெரும்பாலான உணவுக் கழிவுகள் வீட்டு உணவகங்கள் மற்றும் உணவு சேவைகளில் ஏற்படுவதாக வெளிப்படுத்துகிறது.
அறிக்கையின்படி, மக்களுக்குக் கிடைக்கும் உணவில் ஐந்தில் ஒரு பங்கு வீணாகிறது.
2022 ஆம் ஆண்டில், 01.05 பில்லியன் மெட்ரிக் டன் உணவுகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
இதில் 631 மில்லியன் மெட்ரிக் டன் வீடுகளில் வீணாக்கப்பட்டுள்ளன.
இது மொத்த கழிவுகளில் 60 சதவீதம் ஆகும்.
பண்ணை-சந்தை செயல்பாட்டில் 13 சதவீத உணவு வீணாகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, உற்பத்தி செயல்பாட்டின் போது மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது.
அதன்படி, சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 79 கிலோ உணவை வீணாக்குகிறார்.