பூமியில் வெப்பம் அதிகரிப்பு – எல் நினோ மாறும் அபாயம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பூமியில் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ விளைவு ஏற்படும் அபாயம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிலைமைம வரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டி எல் நினோ உருவாகி வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது இயல்பை விட வலுவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் இந்த ஆண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உலக சராசரி வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)