இந்தியாவில் பிறந்தநாள் அன்று உயிரிழந்த சிறுமி – கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட பிறகு 10 வயதுச் சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் உட்கொண்ட கேக்கில் அளவுக்கு அதிகமான செயற்கை இனிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.
அதைத் தயாரித்த நிறுவனத்தின் மற்ற கேக்குகள் சோதிக்கப்பட்டன. மற்ற சில கேக்குகளிலும் அளவுக்கு அதிகமான செயற்கை இனிப்பு இருந்ததாய்ச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sachcharin எனும் செயற்கை இனிப்பு பொதுவாக சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தப்படுவதுண்டு.
சர்க்கரை நோயாளிகள் அதைச் சிறிய அளவு எடுத்துக்கொள்வர். அதை அதிகளவில் உட்கொண்டால் வயிற்றுக்கோளாறு ஏற்படலாம்.
உயிரிழந்த சிறுமியும் அவளது சகோதரியும் பிறந்தநாளன்று இரவில் நோய்வாய்ப்பட்டதாகச் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கேக் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.