சவுதி அரேபியாவில் உடைந்து விபத்துக்குள்ளான ராட்சத ராட்டினம் – 23 பேர் காயம்

சவுதி அரேபியாவின் தைஃப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் இன்று கோர விபத்து நடந்துள்ளது.
‘360 டிகிரி’ எனப்படும் ராட்சத ராட்டின இயக்கத்தின்போது திடீரென உடைந்து விழுந்ததில் 26 பேர் காயமடைந்தனர். இவர்களில் மூவர் மிகவும் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.
உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)