லண்டனில் தொங்கவிடப்பட்ட பிரம்மாண்டமான சூப்பர்மேன் உருவ பொம்மை

லண்டனில், 300 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான சூப்பர்மேன் உருவ பொம்மை தொங்கவிடப்பட்டது.
வார்னர் பிரதர்ஸின் புதிய சூப்பர்மேன் திரைப்படம் ஜூலை 11-ஆம் தேதி ரிலீஸ் ஆவதையொட்டி, 3.5 மீட்டர் உயரம், 120 கிலோவுக்கும் அதிக எடையுள்ள இரும்பு மற்றும் கண்ணாடி இழைகளால் ஆன இந்த சூப்பர்மேன் உருவ பொம்மையை 3டி ஐ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
40 மைல்கள் தொலைவில் இருந்துகூட இந்த சூப்பர்மேன் உருவ பொம்மையை பார்க்க முடியும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
(Visited 2 times, 1 visits today)