உலகம் செய்தி

பேய் பொம்மை பொலிசார் கைது

சக்கி டால் என்ற பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை மிரட்டி வந்த நபர் கைது செய்யப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு மெக்சிகோவில் உள்ள மோன்க்ளோவா நகரில், கார்லோஸ் என்ற நபர் ஒரு பேய் பொம்மை மற்றும் கத்தியை வீசி தெருவில் நடந்து செல்பவர்களிடம் பணம் பறித்ததாக தகவல் வெளியானது.

எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கார்லோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் இருந்த பேய் பொம்மையும் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொம்மையை கைவிலங்கிடுமாறு பொதுமக்கள் கோரியதை அடுத்து, பொலிஸாரும் பொம்மையை கைவிலங்கிட்டு கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கைது செய்யப்பட்ட பொம்மை ஹாலிவுட் படமான ‘சைல்ட்ஸ் ப்ளே’ படத்தில் வரும் ‘சக்கி டால்’ எனப்படும் பொம்மை வகையை சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!