ஜெர்மனி இளைஞர்கள் இராணுவத்தில் கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்படும் அபாயம்
ஜெர்மனி இளைஞர்கள் இராணுவத்தில் கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் கட்டாய இராவ சேவையானது 2011 ஆம் ஆண்டுக்கு முன் காணப்பட்டு இருந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கட்டாய இராணுவ சேவையானது இடை நிறுத்தப்பட்டு இருந்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக சோவியத் யுனியனில் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்த நாடுகளில் சுதந்திரமான முறையில் தனி நாடாக மாறிய பிறகு இராணுவத்துடைய நிலைப்பாட்டில் சில இணக்கங்கள் ஏற்பட்டு இருந்தது.
அதாவது எல்லை நாடுகளில் ஜெர்மன் அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்பே கட்டாய இராணுவ சேவை தேவை இல்லை என்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.
இதேவேளையில் தற்பொழுது ஜெர்மன் அரசாங்கமானது 2031 ஆம் ஆண்டுக்குள் தங்களது இராணுவ வீரருடைய எண்ணிக்கையில் 203000 ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்காக பல திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதாவது 203000 வீரர்களின் எண்ணிக்கை என்ற இலக்கை அவர்கள் அடைய முடியாது விடில், 2011 ஆம்ஆண்டில் இருந்ததது போன்றே கட்டாய இராணுவ சேவையை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.