ஜெர்மனியில் கடுமையாகும் குடியேற்ற சட்டம் – வெளிநாட்டவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி
ஜெர்மனி உட்பட ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் தீவிரம் அடைந்து வருகிறது
இந்நிலையில் அடுத்தாண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியள்ளனர்
கடுமையான குடியேற்ற கொள்கைகளை கொண்ட வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அது தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பெரும் ஆபத்தாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அடுத்தாண்டின் பெப்ரவரியின் கடைசியில் தேர்தல் நடைபெற உள்ளது. கடுமையான புலம்பெயர் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சியினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதன்காரணமாக வேலைக்கு தேவையான ஆட்களை நியமிக்க, குடியேற்றம் தொடர்பான கொள்கைகளை ஜெர்மனி சமீப காலங்களில் எளிமையாக்கியது. ஆனால் குடியேற்றத்திற்கு எதிரான வலதுசாரி கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால் என்ன நிகழும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
குடியேற்ற கொள்கைகளை ஜெர்மனி அரசாங்கம் சமீபத்தில் ஏற்படுத்தியது. ஆனால் ஜெர்மனியை ஆளும் சமூக ஜனநாயக கட்சி (Social Democratic Party) கருத்துக் கணிப்பில் மூன்றாம் இடமே வகிக்கிறது. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் தீவிர வலதுசாரி கட்சியான ஏ.எஃப்.டி. கட்சிகளுக்கு ஐந்து வாக்காளர்களில் ஒருவரின் ஆதரவு கிடைத்துள்ளது.
தற்போது தேர்தல் களத்தில் முதன்மை பெற்றுள்ள கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, சட்டத்திற்கு புறம்பாக குடியேறுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வருகிறது
அந்த கட்சி மட்டுமின்றி தீவிர வலதுசாரியான ஏ.எஃப்.டி. மற்றும் தீவிர இடதுசாரியான பி.எஸ்.டபிள்யூ போன்ற கட்சிகளும் இதையே வலியுறுத்தி பிரசாரம் செய்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, சட்ட ரீதியான குடியேற்றங்களுக்கு எதிராக குறைவாகவே விமர்சனங்களை முன்வைக்கின்றன ஜெர்மானிய கட்சிகள். ஜெர்மனியில் பத்தில் 6 பேர் மேற்கூறிய மூன்று கட்சிகளை ஆதரிக்கின்றனர்.
இந்த அரசியல் சூழல் நடைபெற இருக்கும் தேர்தலைத் தொடர்ந்து கடுமையான குடியேற்றக் கொள்கைகளாகவும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி தலைமையில் புதிய அரசாங்கமாகவும் மாறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது
ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறுவது சிக்கல் மிக்கதாக இருக்கலாம். மற்ற நாடுகளிலும் கூடுதல் தடைகள் ஏற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.