ஜெர்மனியில் கடுமையாக அமுலாகும் குடிவரவு சட்டம் – பலரை வெளியேற்ற நடவடிக்கை
ஜெர்மனிக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையானது குறைவடைந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடுமையான குடிவரவு சட்டம் மூலம் அண்மைக்காலமாக நாட்டிக்குள் வரும் அகதிகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது.
அகதிகளின் வருகை கட்டுப்படுத்து உள்துறை அமைச்சர் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கடந்த 2 மாதங்களில் ஜெர்மன் நாட்டினுள் வருகின்ற அகதிகளின் எண்ணிக்கையில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மார்ச் மாதத்தில் 15 சதவீதமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் மொத்தமாக 16430 பேர் அகதி அந்தஸ்து கோரியுள்ளனர். இது கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 3000 குறைவாகும்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் இறுதி வரை மொத்தமாக ஜெர்மனிக்குள் 71 000 அகதிகள் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாகவும் புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.