நேட்டோவின் புதிய தலைவர் விவகாரம் – சர்ச்சையில் சிக்கிய ஜெர்மனி சான்சலர்
நேட்டோவின் புதிய தலைவராக உர்சுலா வான் டெர் லேயன் வருவதை ஜெர்மன் சான்சலர் ஓலாப் ஸ்கோல்ஸ் தடுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
அவர் ரஷ்யாவுடன் மிகவும் கடினமாக செயற்படுவார் என சான்சலர் நம்பியதனால் இந்த செயலை செய்துள்ளார் என ஜெர்மன் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
விளாடிமிர் புட்டினுடனான இராஜதந்திரத்தில் எச்சரிக்கையுடன் அணுகியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட ஜெர்மன் சான்சலர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான ஆண்டனி பிளிங்கனிடம், தான் இந்த நியமனத்திற்கு எதிரானவர் என்று கூறியதாக கூறப்படுகிறது.
உர்சுலா வான் டெர் லேயன் நேட்டோ தலைவராக வருவதை ஜெர்மன் சான்சலர் திட்டவட்டமாக எதிர்த்தார் என்று பிரஸ்ஸல்ஸில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய தூதர்களை மேற்கோள் காட்டி ஜெர்மன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
உர்சுலா புட்டினை மிகவும் விமர்சித்தார், மேலும் இது சான்சலரின் பார்வையில் நீண்ட காலத்திற்கு ஒரு பாதகமாக இருக்கும் என்று ஆதாரங்கள் மேலும் தெரிவித்தன.