இஸ்ரேலுக்கு மீண்டும் ஆயுதங்களை வழங்கும் ஜெர்மனி!
இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களை விநியோகிப்பதற்கான தடையை ஜெர்மனி அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் ஆயுத விநியோகம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் – ஹமாசிற்கும் இடையிலான போரின்போது சில ஆயுதங்கள் காசா மக்கள் மீது பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விநியோகம் செய்வதை ஜெர்மனி நிறுத்திவைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது இருநாட்டிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக ஜெர்மனி மிகப் பெரிய அளவில் பங்கு வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)




