அமெரிக்காவின் முடிவிற்கு எதிர்ப்பு – வளைந்துகொடுக்கப் போவதில்லை என ஜெர்மனி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் புதிதாக விதித்திருக்கும் கார் வரிகளுக்கு ஜெர்மனி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் முடிவுக்கு தாங்கள் வளைந்துகொடுக்கப் போவதில்லை ஜெர்மனி அறிவித்துள்ளது.
ஐரோப்பா அந்த விவகாரத்தில் உறுதியான பதிலடி கொடுக்கவேண்டும் என்று ஜெர்மனி குறிப்பிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் உதிரி பாகங்களுக்கும் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்தார்.
அந்த நடவடிக்கை, நேரத்தை வீணடிக்கும் வேலை என்றார் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் (Emmanuel Macron).
அனைத்துலக வர்த்தக விதிமுறைகளை வொஷிங்டன் மீறுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)