ஜெர்மனிக்கு 630000 வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை
ஜெர்மனி நாட்டுக்குள் பயிற்றப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைப்பது தொடர்பாக தற்பொழுது சமஷ்டி கட்சி ஆலோசணைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஜெர்மனியின் தற்போதைய சமஷ்டி அரசாங்கமானது கடந்த 06 மாதம் 23ஆம் திகதி புதிய பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மனிக்கு வரவழைப்பதற்கான சட்டம் ஒன்றை இயற்றி இருந்தது.
இந்த சட்டமானது 1.11.2023 இல் இருந்து நடைமுறைக்கு வருகின்றது.
ஜெர்மனியின் மிகப்பெரிய தொழிற்சங்கமான D J P என்று சொல்லப்படுகின்ற தொழிற் சங்கத்துடைய தலைவி வாஹிமி மற்றும் ஜெர்மனியின் வேலை வழங்குனர் சங்கத்துடைய தலைவர் ரைணட் டுல்க் அவர்கள் இவ்வாறு பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மன் நாட்டுக்கு வர வழைக்கும் பொழுது இந்த பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் இந்த நாட்டை கவருவதற்கான சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலை விடுத்து இருக்கின்றார்கள்.
அதாவது இந்த நாட்டினுக்குள் வருகின்ற பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மொழி அறிவை வழங்குவதற்கும் மற்றும் இந்த சமூதாயத்துடன் இவர்கள் ஒன்று இணைவதற்கு மற்றும் குழந்தைகளை பராமரிப்பதற்கும் போதுமான வசதிகளை செய்து கொடுத்தல் வேண்டும் என்றும் கூறி இருக்கின்றார்கள்.
ஜெர்மனியில் தற்பொழுது 6 லட்சத்து 30 ஆயிரம் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தேவை என்றும் அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
இந்நிலையில் ஜெர்மனியில் மொத்தமாக தற்பொழுது 26 லட்ச இளைஞர்கள் யுவதிகள் எவ்விதமான தொழிற் கல்வியையும் கற்காது இடையிலேயே தமது கல்வியை இடை நிறுத்தி கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பயிற்றப்பட்ட தொழிலாளர்களை உள்வாங்குகின்ற சட்டத்தில் எதிர் வரும் காலங்களில் கணனி தொழில் நுட்பத்தில் பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் இந்த நாட்டினுள் வருவதாக இருந்தால் அவர்கள் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று இருத்தல் வேண்டும்.
இதேவேளையில் புதிய சட்டத்தி்ன் படி இவர்கள் தங்களது நாட்டில் போதுமான அளவு இந்த கணனி தொழில் நுட்பத்தில் அறிவுகளை பெற்று இருந்து அனுபவங்களை கொண்டிருந்தால் அவர்களும் இந்த நாட்டிலேயே பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊடாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.