ஜெர்மனியில் உதவி பணத்தில் வாழ்பவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை
ஜெர்மனியில் வேலை செய்ய கூடிய உடல் ஆரோக்கியம் இருந்த நிலையிலும் பல மக்கள் சமூக உதவி பணத்தில் வாழ்வதாக அரசியல் வாதிகளிடையே தற்பொழுது கருத்துக்கள் பகிரப்படுகின்றது.
ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியான CDUCSE கட்சி இந்த விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கமானது எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கைகையை விடுத்து இருந்தது.
தற்பொழுது இதற்கு பொறுப்பான அமைச்சரான வுபேட்டன் ஹைல் அவர்கள் ஜனவரி மாதம் முதல் இவ்வகையானவர்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படள்ளதாக தெரிவித்து இருக்கின்றார்.
இந்த புதிய சட்டமானது நடைமுறைப்படுத்தப்படுமானால் ஜெர்மன் அரசாங்கமானது மொத்தமாக 170 மில்லியன் யூரோக்களை சேகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது எவர் ஒருவர் வேலை செய்ய கூடிய உடல் ஆரோக்கியம் இருந்தும் அவரை சமூக உதவி திணைகளமானது வேலைக்கு செல்லுமாறு வேண்டி இருந்த நிலையில் அவர் வேலைக்கு செல்லாது விடின் அவருடைய சமூக உதவி பணத்தை முற்றாக வழங்கப்படாத நிலைக்கு புதிய சட்டம் மேற்கொள்ளப்படும் என்று தெரியவந்துள்ளது.