ஐரோப்பா

ஜெர்மனி அகதிகளை கட்டுப்படுத்த அமுலாகும் கட்டுப்பாடு

ஜெர்மனி நாட்டில் அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

ஜெர்மனியில் அகதிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் இந்த அகதிகளுடைய எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியானது சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.

ஜெர்மனின் பாராளுமன்றமானது கடந்த கிழமை சில பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்று.

அதாவது குறிப்பாக இந்த நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்டவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்காது என்று இந்த பட்டியல் சொல்லுகின்றது.

குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடான மொல்டாரியா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வருகின்றவர்கள் அகதி விண்ணப்பம் மேற்கொண்டாலும் இவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்காது.

இதேவேளை பாதுகாப்பு நாடுகளின் பட்டியலை நீடிக்க வேண்டும் என்று எதிர் கட்சியானது தெரிவித்து இருக்கின்றது.

குறிப்பாக ட்றுனிசியா, மோரோகோ, அல்ஜிரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்றும்

இவ்வாறு இந்த நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்து கொடுக்க கூடாது என்றும் பிரதான எதிர்கட்சியான அரசாங்கத்திடம் வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.

இந்த ஆண்டு ஆவணி மாதம் இறுதி வரை மொத்தமாக 175277 பேர் ஜெர்மன் நாட்டுக்குள் வந்து அகதி அந்தஸ்தை கோரியுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இந்த ஆண்டு ஜெர்மன் நாட்டு அகதி அந்தஸ்த்து கோரியவர்களின் எண்ணிக்கையானது பாரியளவில் அதிகரித்து காணப்படுகின்றது.

(Visited 52 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்