ஐரோப்பா செய்தி

ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

ரஷ்யா தனது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக ஜெர்மன் குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்காக ரஷ்ய தூதுவருக்கும் அழைப்பு விடுத்து ஜெர்மனி அவரை வரவழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு ஒகஸ்டில் நடந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்ய இராணுவ உளவுத்துறையே காரணம் என்றும் ஜெர்மன் கூறுகிறது.

அத்துடன் பெப்ரவரி மாத கூட்டாட்சி தேர்தலில் தலையீடு செய்ய ரஷ்யா முயற்சித்ததாகவும் ஜெர்மன் குற்றம் சுமத்துகிறது.

மேலும் ஐரோப்பிய நட்புகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்த ஜெர்மன்
“ஃபேன்ஸி பியர்” (Fancy Bear)என்ற ரஷ்ய ஹேக்கர் குழுவே இந்த தாக்குதலில் தொடர்புபட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு ரஷ்ய இராணுவ உளவுத்துறை பொறுப்பு என உளவுத்துறையின் ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஸ்டார்ம் 1516(Storm-1516)” என்ற தவறான தகவல் பிரச்சாரத்தின் மூலம் ரஷ்யா தேர்தலைச் சீர்குலைக்க முயன்றதாகவும் ஜெர்மன் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!