இந்தியா சென்றடைந்தார் ஜெர்மனி அதிபர் பிரட்ரிக்
ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று அகமதாபாத் சென்றுள்ளார்.
அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அவர், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
சபர்மதி ஆசிரமம் மற்றும் சர்வதேச காற்றாடித் திருவிழாவிலும் பங்கேற்கவுள்ள அதிபர் மெர்ஸ், பின்னர் பெங்களூருவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.
அடுத்த மாதம் பிரான்ஸ் அதிபரும் இந்தியா செல்லவுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் உறவு மேலும் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





