ஜேர்மன் – முனிச் விமான நிலையத்தில் பரபரப்பு : 50இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!

ஜேர்மனின் முனிச் விமான நிலையத்தில் காலநிலை எதிர்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக ஏறக்குறைய 60 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட 06 எதிர்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறங்குவது முழுமையாக நிறுத்தப்பட்டதாக விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
11 விமானங்களும் திருப்பி விடப்பட்டதுடன், சுமார் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அவர் அறிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)