இலங்கை

இனப்படுகொலை : கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக புதிய தீர்மானத்தை நிறைவேற்றும் இலங்கை!

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமைக்கு எதிராக இலங்கைவெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் சமீபத்தைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி கனடாவிற்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவருவதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சர் எடுப்பாரா என ஐலண்ட் நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி  ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் ஆலோசனையை பெற்ற பின்னர் எவ்வாறான தீர்மானத்தை கொண்டுவருவது என தீர்மானிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக நிராகரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!