ஐரோப்பா

பொதுத் தேர்தல்; வரலாறு காணாத அளவு தோல்வி கண்ட பிரிட்டன் அமைச்சர்கள்

பிரிட்டனில் பொதுத்தேர்தல் முடிந்து ஜூலை 5ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியிடம் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும் அந்நாட்டின் பிரதமருமாகிய ரிஷி சுனக்.

பிரிட்டனை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது அமைச்சர்கள் ஜூலை 4ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தனர். 1997ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி கண்ட அமைச்சர்களின் எண்ணிக்கையை இது முறியடித்துவிட்டது.

ஏறத்தாழ ஓர் ஆண்டாக பிரிட்டனின் தற்காப்பு அமைச்சராக இருந்த கிராண்ட் ஷாப்ஸ், வெல்வின் ஹாட்ஃபீல்ட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

கடந்த மே மாதம் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் வாள் ஏந்தி அனைத்துலகக் கவனத்தை ஈர்த்த பிரிட்டன் மக்களவைத் தலைவர் பென்னி மோர்டான்ட், பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் நார்த் தொகுதியில் தோல்வியடைந்தார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராகவும் வாட்டி பென்னி மோர்டான்ட் பதவி வகித்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு இருமுறை இவர் போட்டியிட்டுள்ளார். தற்போது அக்கட்சியின் தலைவராக இருக்கும் திரு ரிஷி சுனக் 2024 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியிலிருந்து விலகும் பட்சத்தில் அப்பதவிக்கு திருவாட்டி பென்னி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Penny Mordaunt, tipped as a future Tory leader, also lost

ரிஷி சுனக் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த கில்லியன் கீகன், நீதி அமைச்சர் அலெக்ஸ் சாக், கலாசார அமைச்சர் லூசி ஃப்ரேசர், போக்குவரத்து, அறிவியல் அமைச்சர் மிச்செல் டோனலன் ஆகியோரும் இத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஜானி மெர்சர், ஜேக்கப் ரீஸ்-மோக் உள்ளிட்டோரும் தோல்வியடைந்தனர்.

பிரிட்டனை 14 ஆண்டுகளாக ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சிமீது அந்நாட்டு மக்கள் கொண்ட அதிருப்தியே அக்கட்சியின் தேர்தல் தோல்விக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த அதிருப்தி தொழிலாளர் கட்சிக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்பட்டது.

அண்மைக் காலமாக அக்கட்சியில் நடந்துவரும் உட்கட்சி சண்டைகளுக்காகவும் அக்கட்சியினர்மீது தொடர்ச்சியாகச் சுமத்தப்பட்டுவந்த ஊழல் குற்றங்களுக்காகவும் அக்கட்சியை பிரிட்டன் வாக்காளர்கள் தண்டித்துவிட்டதாக இந்தப் பொதுப் தேர்தலில் வெற்றிகண்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர்கள் தெரிவித்ததாக ஏஎஃப்பி கூறியது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!