இலங்கை

இலங்கை : 2023 (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,531 தனியார் பரீட்சாத்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது..

பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதும் பின்வரும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

www.doenets.lk

www.results.exams.gov.lk

(Visited 14 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!