இஸ்ரேல் ராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட காசவின் அல்-அசார் பல்கலைக்கழம் ;இணையத்தில் வெளியான வீடியோ
காசாவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழத்தை இஸ்ரேலிய ராணுவம் ஒட்டுமொத்தமாக தரைமட்டம் ஆக்கியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மொத்தமாக அழிப்பதற்காக காசாவிற்குள் இஸ்ரேல் ராணுவம் தரைப்படைத் தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து அழிப்பதற்காக இஸ்ரேலிய ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.மேலும் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேலிய ராணுவம் சுற்றி வளைத்து தரை, வான், மற்றும் கடல் என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது.
The Al-Azhar University building in the Gaza Strip was completely destroyed, Palestinian media reported.
The Israeli army has not officially commented on its involvement in the strike.
Al-Azhar University in Gaza was founded in 1991. pic.twitter.com/a1G2Yi8SEa
— NEXTA (@nexta_tv) November 4, 2023
இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் காசா நகரில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழத்தை ஏவுகணை மூலம் தாக்கி அழித்துள்ளது. இந்த அல்-அசார் பல்கலைக்கழகம் 1991ம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக இஸ்ரேலிய ராணுவம் எத்தகைய அறிக்கையையும் வெளியிடவில்லை.இதற்கிடையில் ஒட்டுமொத்தமாக தரைமட்டமாக்கப்பட்ட அல்-அசார் பல்கலைக்கழகத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.